ஹாலிவுட்

‘அவதார் 3’-ம் பாகம் பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம்

செய்திப்பிரிவு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி உலகம் முழு​வதும் வரவேற்​பைப் பெற்ற திரைப்​படம் ‘அவ​தார்’. உலக அளவில் அதி​கம் வசூலித்த படமான இதன் அடுத்த பாகம் ‘அவ​தார்: தி வே ஆஃப் வாட்​டர்’ என்ற பெயரில் 2022ம் ஆண்​டு, 160 மொழிகளில் வெளி​யானது.

இதன் 3-ம் பாகம் ‘அவ​தார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற பெயரில் தற்​போது உரு​வாகி​யுள்​ளது. சாம் வொர்த்​திங்​டன், ஸோயி சல்​டா​னா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்​ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

டிச.18-ம் தேதி வெளி​யாக இருக்​கும் இப்​படம் இந்​தி​யா​வில் தமிழ், தெலுங்​கு, இந்தி மற்​றும் ஆங்கில மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இந்​தப் படத்​தைப் பார்க்க, புக் மை ஷோ செயலி​யில் 10 லட்​சத்​துக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​கள் ஆர்​வம் காட்​டி​யுள்​ளனர். இந்த எண்​ணிக்கை ரிலீஸ் நெருங்​கும்​போது அதிகரிக்​கும் என்​கிறார்​கள்.

“‘அவ​தார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்​தில் அதி​க​மான பண்​டோ​ராவை பார்ப்​பீர்​கள்; சாகசங்​களைக் கொண்ட இந்​தப் படத்தில் உணர்ச்​சிகர​மான காட்​சிகளும் அதி​க​மாக இருக்​கும்” என்று ஜேம்​ஸ் கேமரூன்​ ஏற்​கெனவே கூறி​யிருந்​தார்​.

SCROLL FOR NEXT