பாஜக எம்​.பி கங்​கனா ரணாவத்

 
பாலிவுட்

சினி​மா காட்​சிகளை வைத்து ட்ரோல் செய்​வ​தா? - கங்கனா ரணாவத் கண்டனம்

நிலா

ஜென்- ஸி தலை​முறை​யினரின் போக்கை விமர்சிக்கும் வகையில், அவர்களை ‘குப்பைத் தலைமுறை’ என்று நடிகையும் எம்​.பியு​மான கங்கனா ரணாவத் குறிப்பிட்​டிருந்​தார். இக்​கருத்து நாடு முழு​வதும் கடும் விமர்சனத்தை ஏற்​படுத்தி​யது.

இதைத் தொடர்ந்து, நெட்​டிசன்​கள் சிலர் கங்கனா ரணாவத் தனது திரைப்படங்​களில் நடித்த சில சர்ச்சைக்குரிய மற்​றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைச் சமூக வலைதளங்​களில் பகிர்ந்து, அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

தனக்கு எதிராகப் பரப்பப்படும் இந்த வீடியோக்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கங்​கனா, ட்ரோல் செய்பவர்கள் இளம் தலைமுறையினரைத் தவறாக வழிநடத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்​ளார்.

“ஒரு நடிகை​யாகத் திரை​யில் பல்​வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது எனது தொழில் சார்ந்த கடமை. அதில் நான் நேர்த்தியாக நடிக்க வேண்​டிய கட்டா​யம் உள்ளது.

ஆனால், சினிமா​வில் ஒரு கதாபாத்திரத்துக்காக நடிப்பதும், நிஜ வாழ்க்கையில் வெளிப்படுத்தும் கருத்துகளும் ஒன்​றல்ல” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். திரை வாழ்க்கையையும் நிஜ அரசியலையும்​ போட்டுக்​ குழப்ப வேண்டாம்​ என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT