நடிகை டாப்ஸி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இவர், ‘பீட்’, ‘அனேக்’, ‘தப்பட்’, ‘ஆர்டிகிள் 15’ போன்ற கவனிக்கப்பட்ட படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் ‘அஸ்ஸி’ என்ற படத்தில் இப்போது நடித்துள்ளார்.
இருவரும் ஏற்கெனவே ‘தப்பட்’ படத்தில் பணியாற்றி இருந்தனர். ‘அஸ்ஸி’யில், கனி குஸ்ருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘முல்க்’ படத்துக்குப் பிறகு இதில் டாப்ஸி வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.
இதன் டிரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நீதிக்காகப் போராடும் தனது தேடலில் பின்வாங்க மறுக்கும் தளராத வழக்கறிஞராக டாப்ஸி, வருகிறார். கனி குஸ்ருதி இந்தக் கதையின் உணர்ச்சிப்பூர்வமான மையமாக விளங்குகிறார்.
“இயக்குநர் அனுபவ் சின்ஹா, இந்தப் படத்தை நேர்மையுடன் அணுகி இருக்கிறார். டாப்ஸி சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, இப்படம் ஓர் உரையாடலைத் தொடங்கும்” என்று தயாரிப்பாளர் பூஷன்குமார் தெரிவித்துள்ளார்.