பாலிவுட்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: ‘ஜெயிலர் 2’ நடிகைக்கு நீதிமன்றம் சம்மன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் ஆஜராகாத நடிகை நோரா பதேஹிக்கு டெல்லி நீதி​மன்​றம் மீண்​டும் சம்​மன் அனுப்​பியுள்​ளது.

பெங்​களூரு​வைச் சேர்ந்த இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகர் என்​பவர், அரசி​யல் தலை​வர்​கள் மற்​றும் ஆட்​சி​யாளர்​களு​டன் நட்பு இருப்​ப​தாகக் கூறி தொழிலதிபர்​கள், அரசி​யல்பிரபலங்​கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்​த​தாக புகார்​கள் எழுந்​தன. தேர்​தல் ஆணை​யத்​துக்கு ரூ.50 கோடி லஞ்​சம் கொடுக்க முயன்ற வழக்​கு உள்பட சில வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்ட அவர், சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

அங்கு இருந்​தவாறே தொழி லதிபர் ஷிவிந்​தர் சிங்​கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்​தது தொடர்​பாக சுகேஷ் சந்​திரசேகர் மீது டெல்லி பொருளாதா​ரக் குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இவ்​வழக்​கில் இந்தி நடிகை நோரா பதேஹி​யிடம் போலீ​ஸார் ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தினர்.

இவ்​வழக்கு தொடர்​பாக நோரா பதேஹி நவ.2-ம் தேதி ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், அவர் ஆஜராக​வில்லை. “மிகக் குறைந்த அவகாசத்​தில்​தான் சம்​மன் கிடைத்​தது.முந்​தைய தொழில்​முறை ஒப்​பந்​தங்​கள் காரண​மாக ஆஜராக முடிய​வில்லை” என்று நோராவின் வழக்​கறிஞர்​கள் கூறினர். ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்​கலும் செய்தனர்.

இத​னால் அதிருப்தி அடைந்த நீதிபதி ககன் தீப் சிங், “நீதி​மன்ற நட​வடிக்கை களை எளிதாக எடுத்​துக் கொள்ள வேண்​டாம். அவர் ஒரு சாட்சி. கட்​டாயம் ஆஜராகி இருக்க வேண்​டும். அவரது நட​வடிக்கை ஏற்​றுக்கொள்​ளும்​படி இல்லை” என்று எச்​சரித்​தார். பின்​னர் நவ.6-ல் கண்​டிப்பாக ஆஜராக மீண்​டும் சம்​மன் அனுப்ப உத்​தர​விட்​டார். நடிகை நோரா பதேஹி ‘ஜெயிலர் 2’ படத்​தில் ஒரு பாடலுக்கு நடன மாடி​யிருக்கிறா​ர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT