பாலிவுட்

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ திரைத் துறையினருக்கு சோனு சூட் கோரிக்கை

ப்ரியா

பிரபல இந்தி நகைச்​சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். ஏராளமான திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். இவர், கடந்த 2010-ம் ஆண்​டு, தான் இயக்​கிய படத்​துக்​காக டெல்​லியைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வரிடம் ரூ. 5 கோடி கடன் வாங்கி இருந்​தார்.

அதைத் திருப்​பிச் செலுத்த அவர் வழங்​கிய காசோலைகள் பணம் இன்​றித் திரும்​பிய​தால் அவர் மீது வழக்கு தொடரப்பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை​யின் போது நீதி​மன்​றத்​தில் தவறான தகவல்​களைத் தாக்​கல் செய்ததற்காக அவர் ஏற்​கெனவே கடந்த 2013ம் ஆண்டு சிறைத் தண்​டனை அனுப​வித்​திருந்​தார்.

          

தற்​போது வட்​டி​யுடன் சேர்த்து அந்​தத் தொகை சுமார் 9 கோடி ரூபா​யாக உயர்ந்​துள்ள நிலை​யில், கடனைத் திருப்பித் தராத​தால் 6 மாத சிறைத் தண்​டனை விதிக்கப்பட்​டது.

இந்​நிலை​யில், தனக்கு விதிக்​கப்​பட்ட சிறைத் தண்​டனையை நிறுத்தி வைக்க வேண்​டும் என்ற ராஜ்​பால் யாத​வின் கோரிக்​கையை டெல்லி உயர்​நீ​தி​மன்​றம் சமீபத்தில் நிராகரித்​த​தால் டெல்லி திகார் சிறை​யில் அவர் சரணடைந்​தார். “என்​னிடம் பணம் இல்​லை, சினி​மா​வில் எனக்கு நண்​பர்​களும் இல்​லை” என்று அவர் உருக்​க​மாகத் தெரி​வித்​திருந்​தது சமூக வலை​தளங்​களில் வைரலானது.

பின்​னர் அவரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்​நிலை​யில் திரைத்​துறை​யினர் அவருக்கு உதவ வேண்டும் என்று நடிகர் சோனு சூட் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “ராஜ்​பால் யாதவ் சிறந்த கலைஞர்; தங்​கள் படங்​களில் நடிக்க அவருக்கு கொடுக்​கும் முன் பணம் போல, இப்​போது ஒரு தொகையை அவருக்கு வழங்​கலாம். அது தர்​மம் அல்ல; அது அவருக்கு நாம் அளிக்​கும் கவுர​வம்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT