இதய நோய் சிகிச்சைகளுக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.8 கோடி செலவில் கேத்லேப் கருவி

பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு அமைச்​சர் அர்​ப்பணிப்பு
சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கேத்லேப் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மணி, இதயவியல் துறை தலைவர் டாக்டர் செசிலி மேரி மெஜில்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கேத்லேப் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மணி, இதயவியல் துறை தலைவர் டாக்டர் செசிலி மேரி மெஜில்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated on
1 min read

சென்னை: அண்​ணா​சாலை​யில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில் நேற்று ரூ.8 கோடியி​லான புதிய கேத்​லேப் கரு​வி​யை மக்​கள் பயன்​பாட்​டுக்கு சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் அர்ப்​பணித்​தார்.

பின்னர், அமைச்​சர் கூறிய​தாவது: உலகம் முழு​வதும் இதய நோய் பாதிப்​பு​கள் அதி​கரித்து வரு​கின்றன. இந்த அரசு பொறுப்​பேற்ற பிறகு, கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை​யில் 2 கேத்​லேப், அதாவது, 2 இருதய வடிகுழாய் ஆய்​வகம் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது.

அதே​போல், மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் 2 கேத்​லேப், சென்னை பெரி​யார் அரசு மருத்​து​வ​மனை​யில் 1 கேத்​லேப், சேலம் அரசு மோகன் குமாரமங்​கலம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 1 கேத்​லேப் அமைக்​கப்​பட்​டது. அந்த வகை​யில், இந்த மருத்​து​வ​மனையை​யும் சேர்த்து இது​வரை 7 கேத்​லேப் பயன்​பாட்​டுக்கு கொண்டுவரப்​பட்​டுள்​ளன.

விரை​வில் கடலூர், நீல​கிரி, திரு​வள்​ளுர், திரு​வண்​ணா​மலை, ராம​நாத​புரம் ஆகிய 5 இடங்​களில் புதிய கேத்​லேப் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மாரடைப்பு ஏற்​பட்ட நோயாளி​களுக்கு அடைப்​பு​களை உடனடி​யாக அகற்றி ரத்த ஓட்​டத்தை சீராக்க கேத்​லேப் கருவி உதவு​கிறது.

இதய பாதிப்பு உள்​ளானவர்​களுக்கு அறுவை சிகிச்சை இல்​லாமல் இதய​நாள அடைப்​பு​களை அகற்​று​வதற்கும், இதயதுடிப்பு குறை​பாடுகளுக்​கான சிகிச்சைக்கும் கேத்​லேப் பயன்​படு​கிறது.

ஏற்​கெ​னவே, இந்த மருத்​து​வ​மனை​யில் கேத்​லேப் கருவி ஒன்று பயன்​பாட்​டில் இருந்​தா​லும், தின​மும் அதிகம் பேர் இதய சிகிச்​சைக்கு வரு​வ​தால் இன்​னொரு கேத்​லேப் கருவி ரூ.8 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளது. தனி​யார் மருத்​து​வ​மனை​யில் கேத்​லேப் சிகிச்​சைக்கு ரூ.5 லட்​சம் வரை செல​வாகும். இந்த மருத்​து​வ​மனை​யில் முதலமைச்​சரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்டு திட்​டத்​தின் கீழ் இலவச​மாக வழங்​கப்​படு​கிறது.

மதுரை எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை முடி​யும் தரு​வா​யில் இருப்​ப​தாக சொல்ல முடி​யாது. முழு​மை​யாகபணி​கள் முடிவடைவதற்கு 2028-ம் ஆண்டு இறு​தி​யாகும். எய்ம்ஸ் மருத்​துவ கல்​லூரி​யில் 50 மாணவர் சேர்க்​கைக்கு முதல்​வர் ஒத்​துழைப்பு தந்து ராம​நாத​புரம் அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அவர்​களை சேர்க்க வைத்து வகுப்​பு​ நடத்​தப்​பட்டு வரு​கிறது.

ஒவ்​வோர் ஆண்​டும் 50 மாணவர்​கள் என்ற வகை​யில் கடந்த 4 ஆண்​டு​களாக அம்​மாணவர்​கள் மாநில அரசு மருத்​துவ கல்​லூரி​யில் தான் படித்து வரு​கிறார்​கள். எய்ம்ஸ் மருத்​துவ கல்​லூரியை பார்க்​காமலேயே, மருத்​துவ கல்​லூரி படிப்பை முடித்து வெளி​யில் செல்​பவர்​களாக அவர்​களது நிலை இருக்​கிறது என்றார்.

இந்​நிகழ்​வின் போது, மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, தமிழ்​நாடு அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் மணி, இதய​வியல் துறை தலை​வர் செசிலி மேரி மெஜில்​லா ஆகியோர்​ உடன்​ இருந்​தனர்​.

<div class="paragraphs"><p>சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கேத்லேப் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மணி, இதயவியல் துறை தலைவர் டாக்டர் செசிலி மேரி மெஜில்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p></div>
திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு: திருவிடந்தையில் இன்று நடைபெறுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in