பாலிவுட்

கிருஷ்ணவ​தா​ரம்​ பாடல்​கள் வெளியீடு

நிலா

கிருஷ்ணரின் வாழ்க்​கை​யைச் சித்​தரிக்​கும் வகை​யில் உருவாகியுள்ள திரைப்​படம், ‘கிருஷ்ணவ​தா​ரம்​’படத்தை ஹர்​திக் கஜ்ஜார் இயக்​கி​யுள்​ளார்.

கிருஷ்ண​ராக, சித்​தார்த் குப்​தா, சத்​ய​பா​மா​வாக சம்​ஸ்​கிருதி ஜெய​னா, ராதை​யாக சுஷ்மிதா பட், ருக்​மிணி​யாக நிவாஷினி கிருஷ்ணன் ஆகியோர் நடித்​துள்​ளனர். பிர​சாத் சாஷ்டே இசையமைத்​துள்ள இப்​படத்​தின் டிரெய்​லர் வரவேற்​பைப் பெற்றுள்​ளது.

இப்​படம் கிருஷ்ணரின் சுறுசுறுப்​பான, குறும்​பான தன்மையையும் அவரது பிரசித்தி பெற்ற லீலைகளை​யும் பதிவு செய்​துள்​ள​தாகப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

இந்​தி, தமிழ் உள்பட பல்​வேறு மொழிகளில் மே 7-ல் வெளி​யாகும் இப்​படம் அமெரிக்​கா, இங்​கிலாந்​து, கனடா ஆகிய நாடு​களில் ஆங்​கிலத்​தில் வெளி​யாகிறது. இதற்​கிடையே இப்​படத்​தின் பாடல்கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. பாடல்​களை சோனு நிகம், சுனிதி சவு​கான், ஷ்ரேயா கோஷால், நீதி மோகன், ஜாவேத் அலி உள்​ளிட்ட பலர் பாடி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT