பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ‘மா வந்தே’ ‘பயோ பிக்’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக ‘மா வந்தே’ உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. திரைப்படத்தை ‘சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ்’ வீர் ரெட்டி தயாரிக்கிறார்.
பிரதமர் மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படம் இந்திய அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
சிறு வயதில் இருந்து நாட்டின் பிரதமர் வரை உயர்ந்த மோடியின் வாழ்க்கையை இந்த திரைப்படம் உண்மை சம்பவங்கள் மற்றும் உணர்வுப் பூர்வமான நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமர் மோடியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த அவரது தாயார் ஹீராபென்னிடம் பிரதமர் மோடி வைத்திருந்த பாசம், மரியாதை போன்றவை இத்திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.