ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் இந்த புதிய போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘மீண்டுன் அந்த ஞாபகம் வந்தது. கொலையாளி இல்லை... நான் காதலன். கிங், டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய போஸ்டரில், பின்னணியில் தீப்பிழம்புகள் பற்றி எரிய, வலது கையில் துப்பாக்கியுடன், வாயில் நீண்ட காம்புகளுடன் உள்ள ரோஜாவைக் கடித்தபடி கம்பீரமாக நடந்து வருகிறார் ஷாருக்கான்.
முன்னதாக, இந்தப் படத்தின் வசனங்கள் அடங்கிய ப்ரமோ மற்றும் டீசர் கடந்த ஆண்டில் வெளியாகி இருந்தது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘கிங்’. இதில் ஷாருக்குடன் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன், அபய் வர்மா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் மர்பிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படம், ‘பதான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சித்தார் ஆனந்த், ஷாருக் இணைந்து இருக்கும் இரண்டாவது படம் ‘கிங்’ ஆகும்.