பாலிவுட்

“ரகசி​ய​ திரு​மணம் செய்ய மாட்டேன்” - வைரலான போட்டோவுக்கு கங்கனா விளக்கம்

நிலா

நடிகையும் எம்.பியுமான கங்கனா ரனாவத், கழுத்​தில் தாலி​யுடன் காரில் ஏறி செல்​வது போன்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானதை அடுத்து அவர் ரகசி​ய​மாகத் திரு​மணம் செய்து கொண்​ட​தாக வதந்தி பரவியது.

இதையடுத்து தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் கங்​கனா வீடியோவை ஒன்​றைப் பகிர்ந்து விளக்​கம் அளித்​துள்​ளார். அதில், “நான் பல்​வேறு பகு​தி​களில், படப்​பிடிப்​பில் கலந்து கொண்டு வருகிறேன். நான் கதா​பாத்​திரத்​துக்​கான மேக்​கப்​பில் இருந்தபோது யாரோ ஒரு​வர் எடுத்த புகைப்​படத்தை இணையத்தில் பகிர்ந்​துள்​ளனர்.

இதைப் பார்த்து எனக்கு ஏகப்​பட்ட தொலைபேசி அழைப்​பு​கள் வந்து ​கொண்​டிருக்​கின்​றன. ஒரு நடிகை, பலவித​மான கதாபாத்திரங்​களில் நடிப்​ப​தால் பல்​வேறு தோற்​றத்​தில் இருப்​பது வழக்​கம். திரு​மண​மான பெண்​ணின் தோற்​றத்​தில் இருப்​ப​தில் என்ன வித்​தி​யாசம் இருக்​கிறது ? நான் ரகசி​ய​மாகத் திரு​மணம் செய்து கொள்ள மாட்​டேன்” என்று பதி​விட்​டுள்​ளார்.

நடிகை கங்​கனா ‘கு​யின்’ படத்​தின் 2-ம் பாகத்​தில் நடித்து வருகிறார். இதன் படப்​பிடிப்​பில் இருந்து அவர் மருத்​து​வரைச் சந்திக்​கச் செல்​லும்​போது சிலர் புகைப்​படம் எடுத்​துள்​ளனர். அது வைரலானது.

SCROLL FOR NEXT