பாலிவுட்

‘​ராமாயணா’ டிரெய்லர்​ வெளியீடு தள்ளிவைப்பு

நிலா

பிரபல இந்தி இயக்​குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ரா​மாயணா’ என்ற பெயரில் திரைப்​பட​மாக இயக்​கி​யுள்​ளார். 2- பாக​மாக உரு​வாகி​யுள்ள இதன் முதல் பாகம் தீபாவளிக்கு வெளி​யாக இருக்​கிறது. இதன் டிரெய்​லர் வெளி​யீடு நேற்று (ஜுலை 24) நடை​பெறு​வ​தாக இருந்​தது. ஆனால், சர்​வ​தேச அள​வில் இப்​படத்தை வெளி​யிடு​வதற்​காக, சோனி பிக்​சர்​ஸ் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தால் டிரெய்​லர் வெளி​யீடு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. இதை தயாரிப்​பாளர் நமித் மல்​ஹோத்ரா தெரி​வித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “சோனி பிக்​சர்ஸ் நிறு​வனத்​துட​னான கூட்டு முயற்​சி​யின் மூலம், ‘ரா​மாயணம்’ கதையை உலகுக்கு எடுத்​துச் செல்​லும் எனது கனவு நனவாகி​யுள்​ளது. உலகளா​விய வெளி​யீட்​டின் ஒரு பகு​தி​யாக டிரெய்​லர்​,பின்​னர் வெளி​யிடப்​படும். பிரம்​மாண்​ட​மான அளவில் சர்​வ​தேச பார்​வை​யாளர்​களுக்கு இப்​படம் கொண்டு செல்​லப்​படும். இந்​தி​யத் திரை​யுலக வரலாற்​றில் ‘ராமாயணம்’ முக்​கிய திருப்​பு​முனை​யாக அமை​யும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதில் ரன்​பீர் கபூர் ராம​னாக​வும் சாய் பல்​ல​வி சீதை​யாகவும்​ ​யாஷ் ​ராவண​னாகவும்​ சன்​னி ​தியோல்​ அனும​னாகவும்​ நடித்​துள்​ளனர்​. சூர்​ப்​பணகை​யாக ரகுப்​ ப்​ரீத்​ சிங்​ நடித்​துள்​ளார்​​.

SCROLL FOR NEXT