நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
இதில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், “இது வெறும் சினிமா அல்ல, அதைவிட பெரிய அனுபவம்” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “ராமாயணம் போன்ற படத்தில் ஒரு பகுதியாக இருப்பது பெருமை. இது திரைப் படத்தைத் தாண்டிய பயணம். நம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கதைகளை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் வாய்ப்பு இது.
இப்படம் மூலம் உலக அரங்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நீங்கள் எங்களுடன் சேர்ந்து இந்த ராமாயண உலகுக்குள் நுழையும் தருணத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.