பாலிவுட்

சூர்ப்பணகையாக நடித்த அனுபவம் - ரகுல் ப்ரீத் சிங் மகிழ்ச்சி

நிலா

நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள ‘ரா​மாயணம்’ திரைப்​படத்​தில் ரகுல் ப்ரீத் சிங், ராவணனின் சகோ​தரி சூர்ப்​பணகை கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இதில் ரன்​பீர் கபூர் ராம​ராக​வும், சாய் பல்​லவி சீதை​யாக​வும் நடித்​துள்​ளனர். ராவண​னாக யாஷ் நடித்​துள்​ளார்.

2 பாக​மாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் முதல் பாகம் தீபாவளியை ஒட்டி வெளி​யாக இருக்​கிறது. இந்​தப் படம் இந்​தி, தமிழ், தெலுங்​கு, ஆங்​கிலம் உள்பட பல்​வேறு மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இதில் சூர்ப்​பணகை​யாக நடித்​தது பற்றி ரகுல் ப்ரீத் சிங் விளக்​கம் அளித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “சூர்ப்​பணகை இலங்​கை​யின் அழகான பெண். அவளது ஆளுமை பல பரி​மாணங்​களைக் கொண்​டது. ஒரு நடிகை, அந்​தப் பரி​மாணங்​களில் நடிப்​பது சுவாரஸ்​ய​மாக​வும் மகிழ்ச்​சி​யாக​வும் இருந்​தது. எனக்​குத் தெரி​யாத பல விஷ​யங்​கள் சூர்ப்​பணகை​யின் வாழ்க்​கை​யில் இருந்​தன. திரைக்​கதையைப் படித்​த​போது, லட்​சுமண​னால் அவளது மூக்கு அறுக்​கப்​பட்ட சம்​பவத்​துக்கு முன்​னும் பின்​னும் அவளது வாழ்க்​கை​யில் நடந்த பல விஷ​யங்​களைத் தெரிந்து கொண்டேன்.

அவள் ராமனை எப்​படிச் சந்​திக்​கிறாள் என்​பது போன்ற பல விஷ​யங்​கள் எனக்​குத் தெரி​யாதது. திரைக்​கதையைப் படித்​த​போது புதி​ய​தாகத் தெரிந்​தன; அதனால்​தான் இக்​க​தா​பாத்​திரம் மிக​வும் பிடித்​திருந்​தது. ‘ரா​மாயணம்’ எனது கதா​பாத்​திரத்தை விரி​வான கண்​ணோட்​டத்​தில் அணுகுவதால், வழக்​க​மான வில்லி பிம்​பத்​தைத் தாண்​டி, இந்த கதா​பாத்​திரத்​தின் மற்​றொரு பக்​கத்​தை​யும் இப்​படம் வெளிப்​படுத்​தும்” என்​றார்.

SCROLL FOR NEXT