பாலிவுட்

சக்திமான் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்க எதிர்த்தது ஏன்? - முகேஷ் கன்னா விளக்கம்

நிலா

தூர்​தர்​ஷனில் 1990-களில் வெளி​யான சூப்​பர் ஹிட் தொடர்​களில் ஒன்று ‘சக்​தி​மான்’. சிறு​வர்​களுக்​கானது என்​றாலும் பெரிய​வர்​களும் இதை விரும்​பிப் பார்த்​தது உண்​டு. பிரபல இந்தி நடிகர் முகேஷ் கன்​னா, இந்​தத் தொடரை தயாரித்து நடித்​தார்.

இந்த சக்​தி​மான் கேரக்​டரை கொண்டு திரைப்​படம் உரு​வாக இருப்​ப​தாக கடந்த சில வருடங்​களுக்கு முன் செய்​தி​கள் வெளி​யா​யின. சக்தி மானாக ரன்​வீர் சிங் நடிக்க இருந்தார். இதற்கு நடிகர் முகேஷ் கன்னா கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். அது ஏன் என்​பது பற்றி இப்​போது விளக்கம் அளித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “ரன்​வீர் சிங்​கால் ‘துரந்​தர்’, ‘கல்லி பாய்’ அல்​லது ‘பத்​மாவத்’ படத்​தில் ‘அலா​வுதீன் கில்​ஜி’ போன்ற கதா​பாத்​திரங்​களில் நடிக்க முடி​யும், ஆனால் ‘சக்​தி​மான்’ கேரக்​டரில் நடிக்க முடி​யாது. அதற்​குத் தேவை​யான சரி​யான தோற்​ற​மும் முக​பாவனை​யும் அவரிடம் இல்​லை.

அவருடைய முகம் குறும்​புத்​தனம் மற்​றும் சூழ்ச்​சித் தன்மை கொண்​ட​தாகத் தெரி​கிறது; ஆனால் ‘சக்​தி​மான்’ கதா​பாத்​திரம் மிக​வும் நேர்​மறை​யான தோற்​றத்​தைக் கொண்​டிருக்க வேண்​டும். அதனால் ரன்​வீர் சிங் வேண்​டாம் என்று சொன்​னேன். அதே நேரம் அவர் மோச​மான நடிகர் என்று ஒரு​போதும் கூற​வில்​லை. வணிக ரீதி​யாகப் பார்த்​தால் இது முட்​டாள்​தன​மான முடி​வாக இருக்​கலாம்.

லட்​சக்​ கணக்​கில் அல்ல; கோடிக்​கணக்கான ரூபாய் மதிப்​புள்ள காசோலையை நிறுத்தி வைத்​திருக்​கிறேன். என் அலு​வல​கத்​தில் இருப்​பவர்​களே, ‘சார், காசோலையை வாங்​கிக்​கொள்​ளுங்​கள்’ என்று சொன்​னார்​கள். ‘அமை​தி​யாக இருங்​கள்​. இதைப்​ பற்​றி பேசாதீர்​கள்​’ என்​று சொன்​னேன். பணத்​தை​விட கொள்​கைதான்​ எனக்​கு முக்​கியம்” என்​று கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT