பாலிவுட்

ரூ.2 கோடி பட்​ஜெட்... ரூ.200 கோடி வசூல்! - ‘ஹனு​மன் அன்ஸ்’ அசத்தல்

நிலா

உத்​தர பிரதேசத்​தைச் சேர்ந்த ஆன்​மிக குரு​வும் ஹனு​மன் பக்தருமான நீம் கரோலி பாபா என்ற மகா​ராஜ் ஜியின் வாழ்க்கை மற்றும் போதனை​களை அடிப்​படை​யாகக் கொண்ட ஆன்​மிகத் திரைப்​படம் ‘ஹனு​மன் அன்​ஸ்’.

இந்​தி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் ஷோபினவ் சத்​யா, விஹான் ஷெட்​ஜே​, சந்​தன் ஆனந்த், பூர்​ணிமா திவாரி, அனில் கே.ரஸ்​தோகி மற்​றும் குல்​ஷன் பாண்டே ஆகியோ​ர் நடித்துள்ளனர். விஷால் சதுர்​வேதி தயாரித்து இயக்​கி​யுள்ள இப்படம் நம்​பிக்​கை, பக்​தி, அற்​புதங்​கள் மற்​றும் ஆன்​மிகத்​தின் மூலம் நம்​பிக்​கை​யைப் பெறு​வது போன்ற உணர்​வு​களைச் சொல்கிறது.

ஆக.7-ல் வெளி​யான இப்​படம் முதல் வாரம் அதிக பார்வையாளர்கள் இல்​லாமல் சுமா​ரான வசூலைப் பெற்​றது. பிறகு வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. ரூ.2 கோடி பட்​ஜெட்​டில் உரு​வான இப்​படம் 36 நாட்​களுக்​குப் பிறகு, இந்​தி​யா​வில் மட்​டும் ரூ.205.15 கோடியை வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது.

விரைவில் வெளி​நாடு​களி​லும் இப்​படம் வெளி​யாக இருக்​கிறது. இதனால் வசூல் இன்​னும் அதி​கரிக்​கும் என்​கிறார்​கள். இது​வரை இப்​படம் பட்​ஜெட்டை விட 100 மடங்கு வசூலித்​துள்​ளது குறிப்பிடத்தக்​கது.

SCROLL FOR NEXT