நடிகை​ அமீஷா பட்டேல்

 
பாலிவுட்

அமீஷா பட்​டேல் வீட்டில் திருட்டு - வேலைக்காரப் பெண் கைது

Saravanan Subramaniam

பிரபல இந்தி நடிகை​யான அமீஷா பட்டேல், தமிழில் விஜய்​யுடன் ‘பு​திய கீதை’ படத்​தில் நடித்​துள்​ளார். இவருக்கு மும்பை சர்ச்​கேட் பகு​தி​யில் வீடு உள்​ளது. இதில் அவருடைய தாய் ஆஷா பட்டேல் வசித்து வரு​கிறார். இந்த வீட்​டில் வைத்​திருந்த, வைரம் பதித்த வளை​யல் உள்பட ரூ.5 லட்சம் மதிப்​புள்ள நகைகள் காணாமல் போனதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்​தார்.

இச்​சம்​பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்​தது. இத்​திருட்டு குறித்து வீட்டு வேலைக்​கார பெண் சீமா காடே (40) மீது சந்​தேகம் எழுந்தது. கடந்த 6 மாதங்​களாக, திருடப்​பட்​ட​தாகக் கூறப்​படும் நகை​யைத் திருப்​பித் தரு​மாறு கேட்​டுள்​ளார். நகை திரும்பக்கிடைக்​காத​தால், மெரைன் டிரைவ் போலீ​ஸில் ஆஷா பட்டேல் புகார் அளித்​தார். விசா​ரணை நடத்​திய போலீ​ஸார், சீமாகாடே-வை கைது செய்​துள்​ளனர். அவரிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT