ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் பயோபிக் உருவாக இருக்கிறது.
இதுபற்றி லலித் மோடி கூறும்போது, “தற்போது திரைக்கதை எழுதும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனி குழு இயங்கி வருகிறது. ஆனால், தற்போது அவர்கள் கதையை எழுதும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். என்னுடைய கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க விரும்புகிறார்.
அவரே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு நேரம் இருக்க வேண்டும், ஏனென்றால் இப்போது அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார்.
எனக்கு ரன்வீரைத் தெரியாது. ஆனால் தீபிகாவை நன்றாகத் தெரியும். ஒரு நாள், 'ரன்வீர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னைச் சந்திப்பதற்காக லண்டன் வந்திருந்தார். தான் நடிக்க விரும்பும் ஒரே ஒரு கதாபாத்திரம் இருக்குமானால், அது லலித் மோடி பாத்திரம்தான் என்று ரன்வீரே கூறியிருக் கிறார். அவர் சிறந்த கலைஞர். 'துரந்தர்' திரைப் படத்தில் அவர் நடிப்பு வியக்கத்தக்கது” என்றார்.