பாலிவுட்

மதுபாலா பயோபிக்கில் கியாரா அத்வானியா?

ப்ரியா

பிரபல ​பாலிவுட் நடிகை மதுபாலா, குழந்தை நட்சத்திரமாக நடிக்​கத் தொடங்கி 1950-களில் முன்​னணி நடிகையாக உயர்ந்​தவர். ‘நீல் கமல்’, ‘அமர்’, ‘சல்தி கா நாம் காடி’ உள்பட சுமார் 70 படங்​களில் நடித்​துள்ள இவர், தனது 36 வயதில் மரணமடைந்​தார்.

இவருடைய வாழ்க்கை கதை திரைப்​பட​மாக எடுக்​கப்​படு​வ​தாக கூறப்​பட்டு வந்​தது. பட்​ஜெட் காரண​மாக சில​முறை ஒத்தி வைக்​கப்​பட்ட மது​பாலா​வின் பயோபிக் இப்​போது உரு​வாக இருக்​கிறது. பிரபல பாலிவுட் இயக்​குநர் சஞ்​சய் லீலா பன்​சாலி இப்​படத்தை தயாரிக்​கிறார். ஜஸ்​மீத் கேரீன் இயக்​கு​கிறார்.

          

இவர் ஆலியா பட் நடித்த ‘டார்​லிங்​ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் மது​பாலா​வாக கியாரா அத்​வானி நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன. இந்நிலை​யில் இதை படக்​குழு மறுத்​துள்​ளது.

“மது​பாலா​வாக கியாரா அத்​வானி நடிப்​ப​தாக வெளி​யாகும் தகவலில் உண்​மை​யில்​லை. அது அடிப்​படை ஆதாரமற்ற செய்​தி”என்று படக்​குழு தரப்​பில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது. வேறு யார் நடிக்​கிறார் என்ற விவரத்தை வெளி​யிட​வில்​லை.

SCROLL FOR NEXT