சல்​மான் கான்

 
பாலிவுட்

‘மாத்​ருபூமி’ படத்​துக்கு மத்​திய அரசு அழுத்​தம் கொடுத்​ததா? - சல்​மான் கான் மறுப்பு

நிலா

சல்​மான் கான், சித்​ராங்​கதா சிங் நடித்​துள்ள ‘மாத்​ருபூமி: மே வார்ரெஸ்ட் இன் பீஸ்’ திரைப்​படத்தை அபூர்வா லகியா இயக்கியுள்ளார். இந்​திய- சீன பாது​காப்​புப் படை வீரர்​களுக்கு இடையே, கல்​வான் பள்​ளத்​தாக்​குப் பகுதி​யில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்​பட்ட மோதலை மைய​மாகக் கொண்டு இப்​படம் உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​படத்​தின் சில பகுதி​கள் குறித்து பாது​காப்பு அமைச்​சகம் சில ஆட்​சேபனைகளை எழுப்​பிய​தாகவும், கதையில் மாற்​றங்​களைச் செய்ய வலியுறுத்​தி​ய​தாகவும் கூறப்​பட்​டது. குறிப்​பாக, படத்​தில் சீனாவை நேரடி​யாகக் குறிப்​பிடக்​கூடாது என்​றும் தெரிவிக்கப்பட்டது. இத​னால் படத்​தின் சுமார் 40 சத​வி​கித காட்சிகளை மீண்​டும் பட​மாக்​கிய​தாகச் செய்​தி​கள் வெளியாயின.

இந்​நிலை​யில் இதன் டிரெய்​லர் வெளியீட்டு விழா மும்​பையில் நடை​பெற்​றது. அப்​போது பேசிய சல்​மான் கான், “இதன் திரைக்கதையை மாற்​றுமாறும் மீண்​டும் எழுது​மாறும் மத்திய அரசு அழுத்​தம் கொடுத்​துள்​ள​தாகக் கூறப்​படுவதில் உண்மையல்ல.

நாங்​கள் எல்லை பாது​காப்​புப் படை வீரர்​களைப் பற்​றியும், அவர்​கள் மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினர் என்னென்ன துன்​பங்​களை அனுபவிக்​கிறார்​கள் என்​ப​தைப் பற்றியும் இதில் பேசி​யிருக்​கிறோம். இதில் எந்த எதிர்​மறையும் இல்லை. சூழ்​நிலைகள் அப்படி இருக்கும்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT