விஷால் சதுர்வேதி இயக்கியுள்ள ஆன்மிகத் திரைப்படம் ‘ஹனுமன் அன்ஸ்’. நீம் கரோலி பாபா என்ற மகாராஜ் ஜியின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஷோபினாவ் சத்யா, சந்தன் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட படம் இது.
ரூ.2 கோடியில் உருவான இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. திரையரங்குகளில் 52 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் ரூ.400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் ரூ.362.70 கோடியும், வெளிநாடுகளில் ரூ.38.50 கோடியும் வசூலித்துள்ள இப்படம் இதுவரை ரூ.401.20 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.