எத்தனை வயதானாலும் முரட்டுக் காதலன் கதாபாத்திரங்களில் ஷாருக் தோன்றுவதை அவரின் அகில இந்திய ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதிலும் தீபிகா படுகோன் உடன் அவர் ஜோடி சேரும் படங்களுக்குத் தனி மவுசு வந்துவிடுகிறது.
‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹாப்பி நியூ இயர்’, ‘பதான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘கிங்’ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
இந்தி உள்பட இந்தியாவின் முக்கியப் பிராந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்ஷன் கலந்த காதல் படமான இதை, சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கிறார்.
ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் - மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் இடம் பெற்ற ‘து மில் ஜாயே..’ (Tu Mil Jaaye) என்கிற பாடல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
சச்சின் - ஜிகர் இசையமைத்துள்ள இந்தப் பாடலை மூன்றே நாள்களில் 5.5 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். இது ஷாருக் கானின் முந்தைய படப் பாடல்களின் சாதனையை 24 மணி நேரத்துக்கு முன்னதாக முறியடித்துவிட்டதாகப் புகழ்கிறார்கள் நெட்டி சன்கள்.