நடிகர் இம்​ரான் ஹாஷ்மி

 
பாலிவுட்

தமிழுக்கு வரு​கிறார் இம்ரான் ஹாஷ்மி

நிலா

இந்தி சினிமாவில் பல ஹாரர் படங்​களில் நடித்​துள்ள இம்​ரான் ஹாஷ்மி, மீண்​டும் ‘ரூஹ்’ என்ற படத்​தில் நடிக்​கிறார். இதை மயங்க் ஷர்மா இயக்​கு​கிறார். இப்​படத்​துக்கு இம்​ரான் ஹாஷ்மி இசையும் அமைக்​கிறார். குமார் தவுரானி, கிரிஷ் குமார், விக்​ரம் கக்​கர், சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்​கின்​றனர்.

அடுத்த ஆண்டு இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்​படத்​தின் இசை குறித்து பேசிய இம்​ரான் ஹாஷ்மி, “எனது திரைப்​படங்​களு​டன் ரசிகர்​கள், உணர்வுப்பூர்வமாக இணைவதில் இசை எப்​போதுமே முக்​கியப் பங்கு வகித்துள்ளது. ‘ரூஹ்’ திரைப்​படத்​தின் ஆன்​மாவைப் பிரதிபலிக்கும் வகை​யில், காதல், மர்​மம் மற்​றும் ஆழமான உணர்வு​கள் நிறைந்த இசையை உரு​வாக்க விரும்​பு​கிறோம்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT