இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இயக்கிய ‘கஜினி’ படத்தை ஆமிர்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்தார்.
இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அக் ஷய்குமார் நடிப்பில் ‘ஹாலிடே’, சோனாக் ஷி சின்ஹா நடித்த ‘அகிரா’, சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ ஆகிய படங்களை இந்தியில் இயக்கினார். இந்நிலையில் அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாலாஜி கணேஷ் இயக்கும் இந்திப் படத்தை அவர் தயாரிக்க இருக்கிறார்.
பாலாஜி கணேஷ், சன்னி தியோல் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இதை ரிதேஷ் சித்வகனி, பர்ஹான் அக்தர் ஆகியோருடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸும் தயாரிக்கிறார். இது முற்றிலும் புதிய கதைக் களம் என்றும் சன்னி தியோல் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் முருகதாஸ். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.