பாலிவுட்

தீ​பாவளிக்கு முன்பே வெளியாகிறது ‘ராமாயணம்’?

நிலா

நிதேஷ் திவாரி இயக்​கத்​தில் ராமாயணக் கதை திரைப்​பட​மாகி இருக்​கிறது. இப்​படத்​தில் பாலிவுட் நடிகர் ரன்​பீர் கபூர் ராமராகவும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவண​னாக யாஷும் நடித்துள்ளனர்.

அனு​ம​னாக சன்னி தியோல், லட்​சுமண​னாக ரவி துபே என பலர் நடித்​துள்​ளனர். ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உரு​வாகும் இந்​தப் படம் 2 பாக​மாக உருவாகிறது. இதன் முதல் பாகம் தீபாவளிக்கு வெளி​யாகும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்டு இருந்​தது.

இந்​நிலை​யில் தீபாவளிக்கு முன்​பாக அக்​.30-ல் இப்​படத்தை வெளியிட தயாரிப்​பாளர் நமீத் மல்​ஹோத்ரா ஆலோ​சித்து வருவதாகக் கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT