பாலிவுட்

இந்தி நடிகை​யிடம் கிரெடிட் கார்டு மூலம் மோசடி

நிலா

பாலிவுட் நடிகை​யான கீர்த்தி குல்ஹாரி, ‘சைத்​தான்’, ‘பிங்க்’, ‘மிஷன் மங்​கள்’, ‘உரி: தி சர்​ஜிகல் ஸ்டிரைக்’ உள்பட பல படங்களில் நடித்​துள்​ளார்.

வெப் தொடர்​களி​லும் நடித்து வரு​கிறார். அவர் சைபர் மோசடி​யில் சிக்கி ரூ.2.43 லட்​சத்தை இழந்​துள்​ளார். இவருக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி, வங்​கியி​லிருந்து எச்​சரிக்கை குறுஞ்​செய்தி வந்​தது. அதில், அவரது கடன் அட்​டையைப் பயன்​படுத்தி 2,525 அமெரிக்க டாலர் வெளி​நாட்​டுப் பரிவர்த்​தனை மேற்​கொள்​ளப்​பட்​ட​தாகக் குறிப்​பிடப் பட்​டிருந்​தது.

அதிர்ச்​சி​யடைந்த கீர்த்​தி, உடனடி​யாக வங்​கி​யின் வாடிக்கையாளர் சேவை மையத்​தைத் தொடர்​பு​கொண்டு விவரங்​களை உறு​திப்​படுத்​தி​னார். அப்​போது, அவரது கடன் அட்டை மூலம் 4 தனித்​தனி பரிவர்த்​தனை​களில் மொத்​தம் ரூ.2.44 லட்​சத்​துக்கும் அதி​க​மான தொகை மோசடி செய்​யப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, மேலும் பணப்​பரிவர்த்​தனை நடை​பெறாமல் தடுக்க வங்கி அதி​காரி​கள் அவரது கடன் அட்​டையை உடனடியாக முடக்​கினர்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பாக கீர்த்தி குல்​ஹாரி, மும்பை அம்போலி போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். மும்பை சைபர் குற்றப்​பிரிவு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT