நடிகை​ அமிஷா படேல்

 
பாலிவுட்

‘2 படங்​கள் நடித்​தாலே சூப்​பர் ஸ்டாரா?’ - பிரபல நடிகை சாடல்

நிலா

பிரபல இந்தி நடிகை​யான அமிஷா படேல், தமிழில் விஜய்​யின் ‘புதிய கீதை’ படத்​தில் நாயகி​யாக நடித்​துள்​ளார். இந்​தி​யில் தொடர்ந்து நடித்து வரும் அவர், பாலிவுட்​டில் இளம் நடிகைகள் போலி பப்​ளிசிட்டி மூலம் சூப்​பர் ஸ்டார் பிம்​பத்தை உரு​வாக்க முயற்​சிப்​ப​தாக சாடி​யுள்​ளார்.

சினி​மா​வில் போலி​யான பப்​ளிசிட்டி மூலம் தங்​களை முன்னிலைப்​படுத்​தும் போக்கு நடிகர், நடிகை​களிடையே இருப்பதாகக் கூறப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் அது தொடர்பாகத் தனது சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டுள்ள நடிகை அமிஷா படேல், “பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்​து, பெரும் தாக்கத்தை ஏற்​படுத்​தும் படங்​களைக் கொடுத்​திருந்​தால் உங்களை சூப்​பர் ஸ்டார் என்று அழைத்​துக் ​கொள்​ளுங்​கள்.

அது​வரை, சூப்​பர் ஸ்டார் என்​கிற விளம்பர விளை​யாட்டு விளையாடு​வதை நிறுத்​துங்​கள். மன்​னிக்​க​வும், ஆனால் இது​தான் கசப்பான உண்​மை. தங்​கள் திரை வாழ்க்​கை​யில் ஒரு தனி பிளாக்பஸ்டர் படம் கூட கொடுக்​காத ஏராள​மான நடிகைகள், வருடத்​துக்கு 2 சாதா​ரணப் படங்​களில் நடித்​து, சில படப்​பிடிப்​புத் தளங்​களில் இருப்​ப​தால், தங்​களை நட்​சத்​திரங்​கள் என்று அழைத்துக் ​கொள்​கிறார்​கள்.

ஒரு படம் கூட பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிக்காத பெரும்​பாலான நடிகைகள், தங்​களை நம்​பர் 1 மற்றும் நம்​பர் 2 என்று அழைத்​துக்​கொள்ள விளம்​பரக் குழுக்களுக்​குப் பணம் கொடுக்​கிறார்​கள். இது 2026-ம் வருடம். ரூ.100 கோடி வசூல் கூட இன்று பெரிய விஷ​யம் அல்ல” என்று தெரி​வித்​துள்​ளார். அமிஷா படேலின் இந்​தப் பதிவு சர்​ச்​சையை ஏற்​படுத்தி இருக்​கிறது.

SCROLL FOR NEXT