பாலிவுட்

ரூ.10 கோடி​யில் வீடு வாங்​கிய நடிகை தபு

நிலா

நடிகை தபு, மும்பை வெர்​சோவா பகு​தி​யில் ரூ.10 கோடி மதிப்​பில் புதிய வீடு ஒன்றை வாங்​கி​யுள்​ளார்.

காத்​ரெஜ் பிராப்​பர்​டிஸ் நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான அடுக்கு மாடிக் குடி​யிருப்​பில் 2,153 சதுர அடி பரப்​பளவி​லான வீட்டை அவர் வாங்​கி​யுள்​ளார். 2 கார் நிறுத்​தும் இடங்​களு​டன் சேர்த்து அவர் இதை வாங்​கி​ உள்​ளார். இதில் சுமார் 127 சதுர அடி பரப்பளவு கொண்ட பால்​க​னியும் அடங்​கும். சொத்து பதிவு ஆவணங்​களின்​ படி ரூ.5.24 லட்​சம் முத்திரைக் கட்​ட​ணமும் ரூ.30 ஆயிரம் பதிவுக் கட்​ட​ண​மும் அவர் செலுத்​தி ​உள்​ளார்.

SCROLL FOR NEXT