நடிகை டாப்ஸி

 
பாலிவுட்

“ஹீரோ​வின் மனைவிக்குப் பிடிக்காததால் படத்தில் இருந்து நீக்கினார்​கள்” - டாப்ஸி வருத்தம்

நிலா

நடிகை டாப்​ஸி, திரை​யுல​கில் சந்​தித்த சில மோச​மான அனுபவங்கள் குறித்து சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியுள்ளார். அதில், கதா​நாயக​னின் மனை​விக்​குத் தன்​னைப் பிடிக்​காத​தால் படத்​திலிருந்து நீக்கப்பட்டதாக தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “ஒரு திரைப்​படத்​தில் நடிக்க கால்ஷீட் கொடுத்​திருந்​தேன். திடீரென அந்​தப் படத்​திலிருந்து நீக்கி​விட்​டார்​கள். கதா​நாயகன்​தான் என்னை மாற்றிவிட்​டார் என்று தெரிவிக்​கப்​பட்​டது. அதற்​கான காரணம் என்ன என்​பது கடவுளுக்​குத்​தான் தெரி​யும். இதற்​குப் பல காரணங்​களை என்னால் கற்​பனை செய்து பார்க்க முடி​யும். அவருக்​குப் பாது​காப் பின்மை உணர்வு இருந்​திருக்​கலாம்; அல்​லது தனக்கு நெருக்கமான வேறு ஒரு​வரை நடிக்க வைக்க விரும்பி இருக்கலாம்.

ஆனால் எனக்கு எந்த உறு​தி​யான காரண​மும் சொல்லப்படவில்லை. பிறகு ஹீரோ​வின் மனை​விக்கு என்​னைப் பிடிக்​காத​தால்​தான் நான் நீக்​கப்​பட்​டேன் என்று சொன்​னார்​கள். இது எனக்கு ஆச்​சரிய​மாக இருந்​தது. திரைத்​துறைக்கு நான் புதிதாக வந்​திருந்த காலத்​தில் சில காட்​சிகள், படப்பிடிப்பின்போது இயல்​பான​தாகத் தோன்​றியது.

ஆனால் படம் வெளி​யான​ போது அவை தேவையற்ற அளவுக்கு பாலியல் பார்​வை​யுடன் காட்​சிப்​படுத்​தப்​பட்​டிருப்​பதை உணர்ந்தேன். ஒரு பெண்ணை திரைப்​படத்​தில் கவர்ச்​சி​யாகக் காட்​டுவது வேறு; அவரை தேவையற்ற அளவுக்​குப் பாலியல் பார்வை​யில் காட்​டுவது வேறு. பிறகு அது பற்றி தெரிந்​து​கொண்டு கவனமுடன் நடிக்கத் தொடங்கினேன்” என்​றார்.

SCROLL FOR NEXT