பாலிவுட்

ரசிகர்​களிடம் சிக்​கிய அமிதாப்​பச்சன்

செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் நடிகர் அமி​தாப்​பச்​சன், இந்​தி​யன் ஸ்ட்​ரீட் பிரீமியர் லீக்​கின் மூன்​றாவது சீசன் தொடக்க விழாவுக்​காக குஜராத் மாநிலம் சூரத்​துக்கு சென்​றார். அவர் தனது சொந்த அணியை ஆதரிக்க அங்கு சென்​றிருந்​தார். முன்​னாள் கிரிக்​கெட் வீரர்கள், நடிகர்​கள் சிலரும் அங்கு சென்​றிருந்​தனர். அவர்​களுக்கு சூரத் விமான நிலை​யத்​தில் பிரம்​மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்​னர், நடிகர் அமி​தாப்​பச்​சன் அவருடைய நண்​பரும் தொழிலதிபரு​மான சுனில் ஷாவின் பங்​களா​வுக்​குச் சென்​றார். இதைக் கண்ட ரசிகர்​கள் அவரைப் பார்க்​கக் கூடினர். கூட்​டம் கட்டுப்​படுத்த முடி​யாத​தாக மாறியதை அடுத்து தள்​ளு​முள்ளு ஏற்பட்​டது. இதனால் அந்த பங்​களா​வின் கண்​ணாடி நுழை​வா​யில் இடிந்து விழுந்​தது. சிலருக்கு சிறிய காயங்​கள் ஏற்​பட்​டன.

சம்பவ இடத்​தில் இருந்த போலீ​ஸார் நிலை​மை​யைக் கட்​டுப்​படுத்​தி, அமி​தாப் பச்​சனை பாது​காப்பாக ஓட்​டலுக்கு அழைத்​துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நில​வியது. இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில்​ பரவி வருகிறது.

SCROLL FOR NEXT