ரன்பீர் கபூருடன் இந்தாண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக வெளியான செய்தியை அலியா பட் கிண்டல் செய்துள்ளார்.
இந்தி திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டு காதலர்களாக வலம் வருகிறது ரன்பூர் கபூர் - அலியா பட் ஜோடி. இருவருமே காதலிப்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலையுமே வெளியிடவில்லை.
இந்த ஜோடி இணைந்து அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகும் 'பிரம்மாஸ்திரா' படத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டே இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதனிடையே, தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அலியா பட். அப்போது இந்தாண்டு திருமணம் நடைபெறவுள்ளது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒரு முறை புதிதாக ஒரு திருமண தேதியைச் சொல்கிறார்கள் அல்லது வேறு வகையான புரளி வருகிறது. இந்த புரளிகள் எனக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார் அலியா பட்
தவறவிடாதீர்