சென்னை: ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வையாளர், சாலை ஆய்வாளர் உள்பட 50 விதமான பதவிகளில் 839 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், சாலை ஆய்வாளர் உள்பட 50 விதமான பதவிகளில் 839 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதி பதவிகள்) அறிவிக்கை வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஜூலை 7-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.