வேலை வாய்ப்பு

ஜெர்மனியில் பிசியோதெரபிஸ்ட், கார் டெக்னீசியன் வேலை: தமிழக அரசு நிறுவனம் தகவல்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: ஜெர்மனி நாட்டில் பிசியோதெரபிஸ்ட், கார் டெக்னீசியன், லாரி ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘ஜெர்மன் நாட்டில் பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப வல்லுநர் (Car Technician), வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் (Commercial Technician) மற்றும் லாரி ஓட்டுநர் ஆகிய பணிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிசியோதெரபிஸ்ட் பணிக்கு சம்பந்தப்பட்ட அடிப்படை கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் பி-2 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வணிக வாகனத் தொழில்நுட்ப வல்லுநர் பணிகளுக்கு அடிப்படை தொழில்நுட்பக் கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் ஏ-2 நிலை தேர்ச்சி வேண்டும். லாரி ஓட்டுநர் பணிக்கு ஓட்டுநர் உரிமத்துடன் ஜெர்மன் மொழியில் ஏ-2 நிலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, கல்வித் தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊதியம் மற்றும் பணி விவரங்கல் தொடர்பான தகவல்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.

மேலும் 044- 2250 2267 மற்றும் 63791 79200, 95662 39685 ஆகிய எண்களில் தொடர்புகொண்டும் விவரங்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT