வேலை வாய்ப்பு

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூ.10,000 உடன் ஓராண்டு டிஜிட்டல் பயிற்சி திட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான 'டிஜிட்டல் பயிற்சித் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.

2024- 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, புதுச்சேரி அரசு இந்த டிஜிட்டல் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த முயற்சி, பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பட்டதாரிகளுக்கு நேரடி நடை முறை அனுபவத்தை வழங்கு வதற்காகவும், ஒரு முறையான கட்டமைப்பின் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

          

அதன்படி இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 150 விண்ணப்பதாரர்களுக்கு யூனியன் பிரதேசத்துக்குள் அமைந்துள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் நேரடியாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும். கல்விப்புலத்துக்கும் தொழில் முறைத் தேவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (B.E/B.Tech (CS/IT), Bachelor of Computer Application (BCA), B.Sc (CS/IT), M.E/M.Tech (CS/IT), MCA, M.Sc(CS/IT)). குறைந்தபட்சம் 60 சதவீதம் மொத்த மதிப்பெண்கள் அல்லது 6 CGPA பெற்றிருக்க வேண்டும். 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்ப பதிவு முற்றிலும் விண்ணப்பதாரரின் வேலை வாய்ப்பு பதிவு எண் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களை அமர்த்த விரும்பும் நிறுவனங் கள் கார்ப்பரேட் அடையாள எண் அல்லது உத்யம் பதிவு பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் அமைந் திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள் ளப்படும். 150 இடங்கள் மட்டுமே உள்ளதால், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக் கப்படும். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு புதுச்சேரி அரசால் மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். ஓராண்டு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு சான்றிதழ் வழங்கப் படும் விண்ணப்பங்களை ஜன.20ம் தேதி (நேற்று) முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். 31-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்.

பிப்ரவரி நான்காம் வாரத்தில் பயிற்சி தொடங்கப்படும். முழு மையான விவரங்கள் வழிகாட் டுதல்கள் மற்றும் விண்ணப்பிக்க 'https://digitalinternship.py.gov.in' என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT