வணிகம்

இந்தியா உள்​ளிட்​ட 16 நாடுகளின்​ பொருளாதார கொள்​கைகளுக்​கு எதிராக அமெரிக்​​காவில்​ விசாரணை

செய்திப்பிரிவு

வாஷிங்​டன்​: அமெரிக்​க அதிபர்​ டொனால்​டு ட்ரம்ப்​, நாடாளுமன்​ற ஒப்​புதலைப்​ பெறாமல்​ உலக நாடுகளுக்கான இறக்​குமதி வரியை கடந்​த ஆண்​டு தன்னிச்​சையாக உயர்​த்​தினார்​. இதை எதிர்​த்​து தொடரப்பட்​ட வழக்​கை விசாரித்​த அந்​நாட்​டு உச்​ச நீதிமன்​றம்​, ட்ரம்​பின்​ வரி விதிப்​பு உத்​தரவை ரத்​து செய்தது.

இதைத்​ தொடர்​ந்​து, வர்​த்​தக சட்​டத்​தின்​ 122-வது பிரிவின்​ கீழ்​ அனைத்​து நாடுகளின்​ மீதும்​ 10% வரி விதித்​தார்​. கடந்​த பிப்​ரவரி 24 முதல்​ நடைமுறைக்​கு வந்​த இது, சட்​டப்​படி 150 நாட்​களுக்​கு மட்​டுமே அமலில்​ இருக்​கும். இந்நிலையில், இந்​தியா மற்​றும்​ சீனா உட்​பட 16 நாடுகளின்​ கொள்​கைகள்​ மற்​றும்​ தொழில்​ துறை நடைமுறைகள்​ குறித்​து, அமெரிக்​க வர்​த்​தக சட்​டத்​தின்​ (1974) 301-வது பிரிவின்​ கீழ்​ விசாரணை தொடங்​கப்​பட்​டுள்​ளதாக அமெரிக்​க வர்​த்​தகப்​ பிரதிநிதி (யுஎஸ்​டிஆர்​) நேற்​று முன்​தினம்​ தெரிவித்​தார்​.

அமெரிக்​க வர்​த்​தகத்​துக்​கு பாதிப்​பு ஏற்​படுத்​தும்​ ​ வெளிநாட்​டு வர்​த்​தக நடைமுறைகளை விசாரிக்​கவும்​, அவற்றுக்​கு எதிராக நடவடிக்​கை எடுக்​கவும்​ இந்​தப்​ பிரிவு அதி​காரம்​ வழங்​குகிறது. இரும்​பு, அலுமினியம்​, வாகனம்​, பேட்​டரிகள்​, இயந்​திரங்​கள்​, குறைக்​கடத்​திகள்​, சூரிய ஆற்​றல்​ தொகுதிகள்​ உள்ளிட்ட துறைகள் இந்த விசாரணையின் கீழ் வருகின்றன.

          
SCROLL FOR NEXT