வணிகம்

இந்​தி​யப் பொருட்​கள் மீதான 12.5% வரியை அமெரிக்கா கைவிட வேண்டும்: மத்திய வர்த்தகத் துறை வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யப் பொருட்​கள் மீதான 12.5 சதவீத வரியை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று இந்​தியா தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது. இந்​தி​யா, அமெரிக்கா இடையே​யான வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யும் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது.

அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்​டாவது முறை​யாக பதவி​யேற்​றார். அவர் அதிப​ராக பதவி​யேற்​றது முதல் இந்​தி​யா, சீனா, கனடா உள்பட பல்​வேறு நாடு​கள் மீது கூடு​தல் வரி​களை விதித்​தார். குறிப்​பாக, இந்​தி​யப் பொருட்​கள் மீது 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இதனால் இரு நாடு​களுக்​கும் இடையே​யான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்​பட்​டது.

இதைத் தொடர்ந்து நடந்த பேச்​சு​வார்த்​தை​யின் முடி​வில், இந்தியா மீதான வரியை 18 சதவீத​மாக அமெரிக்கா குறைத்​தது. சில பொருட்​களுக்கு 12.5 சதவீத கூடு​தல் வரி​யும் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனிடையே, இரு நாடு​களுக்கு இடையே வர்த்தக ஒப்​பந்​தம் மேற்​கொள்ள பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. பல மாதங்​களாக, பல கட்​டங்​களாக இந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், இந்​தி​யா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தம் இறு​தி​கட்​டத்​தில் உள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் 2 வாரங்​களுக்கு முன்பு தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் இருந்து இறக்​கும​தி​யாகும் பொருட்​களுக்கு விதிக்​கப்​பட்​டுள்ள 12.5 சதவீத வரி திட்​டத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று இந்​தியா தரப்​பில் அண்​மை​யில் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த விவ​காரத்​தில் அமெரிக்கா தனது முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்​றும் மத்​திய வர்த்​தகத் துறை இணை செயலர் பிரிஜ் மோகன் மிஸ்ரா தெரி​வித்​துள்​ளார்.

முன்​மொழியப்​பட்ட கூடு​தல் வரியை இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கவன​மாக மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று இந்​தி​யத் தொழில் துறை கூட்​டமைப்​பான ஃபிக்கி தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக ஃபிக்கி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “கூடு​தல் வரி​யானது இந்​திய ஏற்​றும​தி​யாளர்​களுக்கு மட்​டுமல்​லாமல், அமெரிக்க உற்​பத்​தி​யாளர்​கள், இறக்​கும​தி​யாளர்​கள், சில்​லறை விற்​பனை​யாளர்​கள் மற்​றும் இறு​தி​யில் அமெரிக்க நுகர்​வோருக்​கும் செல​வு​களை அதி​கரிக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் வரி​விதிப்பு தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நீடித்து வரு​வ​தாக​வும், 12.5 சதவீத கூடு​தல் வரி தொடர்​பாக இரு நாட்டு அதி​காரி​களும் தொடர்ந்து கலந்​தாலோ​சனை செய்​ய​வுள்​ளனர் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அமெரிக்க அதி​காரி​களு​ட​னான சந்​திப்​பின் போது இந்த 12.5 சதவீத வரியைக் கைவிட வேண்​டும் என்று இந்​தியா மீண்​டும் வலி​யுறுத்​தும் என்று பிரிஜ் மோகன்​ மிஸ்​ரா தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT