சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்

சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்​தின் சஹர்சா மாவட்​டம், சிம்ரி பக்​தி​யார்பூர் நகரில் முகமது அன்​வர் என்​பவரின் மகன் முகமது அப்​துல்​லாவுக்​கும் முகமது ஜாவேத் என்​பவரின் மகளுக்​கும் வியாழக்​கிழமை திரு​மணம் நடை​பெற்​றது.

பின்னர் திரு​மண விருந்​தில் சிக்​கன் பரி​மாறப்​பட்​டது. அப்​போது தங்​களுக்கு மட்​டன் விருந்து அளிப்​ப​தாக வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டிருந்​த​தாக மணமகன் வீட்​டார் குற்​றம் சாட்​டினர். இதில் இரு தரப்​பிலும் வாக்​கு​வாதம் ஏற்​பட்டு கைகலப்பானது.

ஒரு வீடியோ பதி​வில், அங்​கிருந்த நபர்​கள் விருந்​தினர்​களைக் கம்​பு​களால் தாக்​கு​வதை​யும் வாள்​களை வீசுவதை​யும் காண முடிகிறது. சம்பவ இடத்​துக்கு போலீ​ஸார் விரைந்து வந்த பிறகு அங்கு நிலைமை கட்​டுக்​குள் வந்​தது.

திருமண நிகழ்ச்​சி​யில் நடந்த இருதரப்பு மோதலில் 12 பேர் காயம் அடைந்​தனர். இவர்​கள் சிம்ரி பக்​தி​யார்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த சம்​பவம் குறித்து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​வ​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in