வணிகம்

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிப்​ர​வரி 1ம் தேதி மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்யப்படும் என்று மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்லா தெரிவித்துள்​ளார்.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. முதல் ​நாள் கூட்​டத்​தில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு உரை​யாற்​றுகிறார். ஜனவரி 30ம் தேதி பொருளாதார ஆய்​வறிக்​கை தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

இதைத் தொடர்ந்து பிப்​ர​வரி 1ம் தேதி ஞாயிற்​றுக் ​கிழமை நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் 9-வது முறை​யாக மத்​திய பட்ஜெட்டை தாக்​கல் செய்​வார் என்று மத்​திய அரசு ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக டெல்​லி​யில் நேற்று மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்லா கூறிய​தாவது: பிப்​ர​வரி 1ம் தேதி மக்​களவை​யில் மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படும். கடந்த கூட்​டத் தொடரின் ​போது அவை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி இ-சிகரெட் புகைத்​த​தாக புகார் அளிக்​கப்​பட்டு உள்​ளது.

அவை​யின் மாண்பை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​படும் எம்​பிக்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். இ-சிகரெட் விவ​காரம் தொடர்​பாக சிறப்பு கமிட்டி விசா​ரணை நடத்தி வரு​கிறது. அந்த கமிட்டி அளிக்​கும் பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT