வணிகம்

மத்திய பட்ஜெட் தாக்கம்: பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

சென்செக்ஸ் 1000+ புள்ளிகள் சரிவு

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2026-ல் எதிர்கால ஒப்பந்தங்களுக்கான பத்திரப் பரிவர்த்தனை வரி (STT) உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

மத்திய பட்ஜெட்டில் எதிர்கால ஒப்பந்தங்களுக்கான பத்திரப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax) தற்போதுள்ள 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அனைத்து வகை பங்குதாரர்களுக்கும் பங்குகளைத் திரும்பப் பெறுதல் மூலம் கிடைக்கும் வருமானம் இனி மூலதன ஆதாயமாக வரி விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

          

இதனால் சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தாலும், பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டு 1,000 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தகமானது. அதே சமயம், பிற்பகல் 1:09 மணி நிலவரப்படி, என்எஸ்இ நிஃப்டி50யானது 211.35 புள்ளிகள் சரிந்து 25,109.30 ஆக இருந்தது. இன்று நிஃப்டி 50 குறியீடு 25,333.75 இல் வர்த்தகத்தை தொடங்கியது. அதே நேரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 82,445.97-இல் தொடங்கியது.

பிஎஸ்இ சென்செக்ஸ் பட்ஜெட் தாக்கலின் போது 2,370.36 புள்ளிகள் அல்லது 2.88 சதவீதம் சரிந்து, 80,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. அதேபோல 50 பங்குகளைக் கொண்ட என்எஸ்இ நிஃப்டியும் இதே சரிவைப் பிரதிபலித்து, 748.9 புள்ளிகள் அல்லது 2.95 சதவீதம் சரிந்து 24,571.75 ஆக இருந்தது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள் 6.50 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் எடர்னல் ஆகிய பங்குகளும் சரிவை சந்தித்தன. சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை லாபம் ஈட்டிய பங்குகள் ஆகும்.

SCROLL FOR NEXT