வணிகம்

டிசிஎஸ் புதிய கிளை ருமேனியாவில் திறப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டிசிஎஸ் நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது:

ஐரோப்​பிய நாடான ருமேனி​யா​வின் புகாரெஸ்​டில் டிசிஎஸ் புதிய கிளையை திறந்​துள்​ளது. இதன் மூலம் உள்​ளூர் திறன்​களை வலுப்​படுத்​த​வும், ஐரோப்​பிய விநியோக வலை​யமைப்பை வலுப்​படுத்​த​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த புதிய அலு​வல​கத்​தில் பணி​யாற்​றும் அலு​வலர்​களில் 95% பேர் ருமேனியாவை சேர்ந்​தவர்​கள்.

புதிய புகாரெஸ்ட் அலு​வல​கம் டிசிஎஸ் நிறு​வனத்​தின் ஐரோப்​பிய விநி​யோக வலை​யமைப்​பின் ஒரு அங்​க​மாக அமை​யும், இது ஐரோப்​பா​வில் 20 நாடு​களில் 350-க்​கும் மேற்​பட்ட வாடிக்​கை​யாளர்​களுக்கு சேவை​களை வழங்க உதவு​கிறது. இவ்​வாறு டிசிஎஸ்​ தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT