வணிகம்

சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகளில் நேற்று கடும் சரிவு காணப்​பட்​டது. சென்​செக்ஸ் 1,124 புள்​ளி​கள் சரிந்​தன. இதனால் ஒரே நாளில் முதலீட்​டாளர்​களுக்கு சுமார் ரூ.9 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது.

கடந்த 7 வாரங்​களாக இந்​திய பங்​குச் சந்​தைகள் தொடர்ந்து சரிந்​தன. நேற்று காலை​யிலும் இந்​திய பங்​குச் சந்​தை​யின் அனைத்து குறி​யீடு​களும் சரிவுடன் தொடங்​கின. குறிப்​பாக, நிப்டி குறி​யீடு 23 ஆயிரம் என்ற ஆதரவை இழந்​தது. வர்த்தக முடி​வில் தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 360 புள்​ளி​கள் (1.56%) சரிந்து 22,780-ல் நிலை பெற்​றது. சென்​செக்ஸ் 1,124 புள்​ளி​கள் சரிந்து (1.52%) 72,772-ல் நிலை பெற்​றது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்​டாளர்​களுக்கு சுமார் ரூ.8.9 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது. ரியல் எஸ்​டேட், வங்​கி​கள், வாக​னம், எப்​எம்​சிஜி, ஸ்மால்​கேப், மிட்​கேப் உள்​ளிட்ட பெரும்​பாலான துறை சார்ந்த குறி​யீடு​கள் 2 சதவீதம் வரை சரிவை சந்​தித்​தன.

ஈரான் முன்​வைத்த 7 நாள் போர் நிறுத்த திட்​டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்​தார். இதனால் மத்​திய கிழக்கு நாடு​களில் போர் பதற்​றம் நீடிக்​கிறது. கச்சா எண்​ணெய் விலையும் நேற்று மீண்​டும் உயரத் தொடங்கி உள்​ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்​தி​ய​தால் அந்​நாட்டு பத்​திரங்​கள் மீதான வரு​வாய் அதி​கரித்​துள்​ளது. ரூபாய் மதிப்​பும் சரிந்து வரு​கிறது. இது​போன்ற காரணங்​களால் பங்​குச் சந்​தை் சரிவடைவதாக இத்​துறை வல்​லுநர்​கள்​ தெரிவிக்​கின்​றனர்​.

SCROLL FOR NEXT