வணிகம்

வர்த்தக காஸ் சிலிண்டருக்கான ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரான் போர் காரண​மாக சமையல் காஸ் விநி​யோகம் தடைபட்​டது. வீட்டு உபயோக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு முன்​னுரிமை அளிப்​ப​தற்​காக வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு மத்​திய அரசு கட்​டுப்​பாடு விதித்​தது.

இதனால் நாடு முழு​வதும் உள்ள உணவகங்​களில் உணவுப் பொருட்​கள் உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டது. தற்​போது மக்​கள் காஸ் சிலிண்​டர்​கள் முன்​ப​திவு செய்​வது குறைந்​து, வீட்டு உபயோக சிலிண்​டர் விநி​யோகம் இயல்பு நிலைக்கு திரும்​பி​யுள்​ளது.

          

வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​தில் 5-ல் ஒரு பங்கு மீண்​டும் தொடங்​கிய பின்​பு, மாநிலங்​களுக்கு கூடு​தலாக 10% ஒதுக்​கீடு செய்​ய​வும், பைப் மூலம் காஸ் விநி​யோகம் செய்​யும் திட்​டத்தை விரைவு படுத்​த​வும் மத்​திய அரசு அனு​மதி வழங்​கியது.

இந்​நிலை​யில் மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களுக்கு கூடு​தலாக 20% ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதன் மூலம் வர்த்தக சிலிண்​டர்​களுக்​கான ஒதுக்​கீடு 50% ஆக உயர்ந்​துள்​ளது. இதன் காரண​மாக உணவு விடு​தி​கள், தொழிற்​சாலை கேன்​டீன்​கள், உணவு பதப்​படுத்​தும் தொழிற்​சாலைகள், சமு​தாய உணவு கூடங்​கள் ஆகிய​வற்​றுக்கு காஸ் சிலிண்​டர்​கள் தாராளமாகக் கிடைக்​கும்.

SCROLL FOR NEXT