வணிகம்

டி.வி., காஸ் அடுப்புக்கு ‘ஸ்டார் ரேட்டிங்’ கட்டாயம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டி.​வி., காஸ் அடுப்பு உள்​ளிட்ட பொருட்​களுக்கு இன்று முதல் எரிசக்தி சிக்​க​னம் தொடர்​பான ‘ஸ்​டார் ரேட்​டிங்’ கட்​டா​யம் என மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

மத்​திய அரசு ஏற்​கெனவே ஏசி, வாட்​டர் ஹீட்​டர், சீலிங் ஃபேன், வாஷிங் மெஷின், எல்​இடி விளக்​கு​கள் உள்​ளிட்ட பொருட்​களுக்கு எரிசக்தி சிக்​க​னம் தொடர்​பான ஸ்டார் ரேட்​டிங் (நட்​சத்​திர குறி​யீடு) கட்​டா​யம் என அறி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் ப்ரிட்​ஜ், டி.​வி, எல்​பிஜி காஸ் ஸ்டவ், கூலிங் டவர், சில்​லர் உள்​ளிட்ட பொருட்​களுக்கு இன்று முதல் ஸ்டார் ரேட்​டிங் கட்​டா​யம் என மத்​திய அரசு தற்​போது அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT