பயணிகள் வசதிக்காக, ராமேசுவரம் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமேசுவரத்தில் இருந்து டிச.30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (06099) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் பனாரஸை சென்றடையும். மறுமார்க்கமாக, பனாரஸில் இருந்து ஜன.2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் (06100) புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை வழியாக பனராஸ் செல்லும்.