வணிகம்

“மென்பொறியாளர்கள் தங்கள் திறனை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பல துறை​களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆக்கிரமித்து வரும் சூழ்​நிலை​யில் மென்​பொறி​யாளர்​கள் தங்​கள் திறன்​களை தொடர்ந்து புதுப்​பித்​துக் கொள்ள வேண்​டும் என சோஹோ நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு அறி​வுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தின் அதிவேக வளர்ச்சி காரண​மாக மென்​பொருள் உரு​வாக்​கம் (கோடிங்) சார்ந்த பணி​கள் பெரிய அளவில் மாறி வரு​கிறது. இந்​தச் சூழலில், துறை சார்ந்த வல்​லுநர்​கள் தங்களின் திறன்​களைத் தொடர்ந்து புதுப்​பித்​துக்​கொள்ள வேண்டும். அப்​போது​தான் தங்​களின் தேவையை அவர்​கள் தொடர்ந்து தக்​க​வைத்​துக் கொள்ள முடி​யும்.

ஏஐ தொழில்​நுட்​பம் மிக விரை​வாக கோடிங் உரு​வாக்​கும் திறனைப் பெற்று வரு​கிறது. வழக்​க​மான கோடிங் பணி​களின் தேவை குறைந்து வரு​கிறது. எனவே, மென்​பொருள் பொறியாளர்கள் வெறும் கோடிங் சார்ந்து எழுது​வதோடு நிறுத்​தி​வி​டா​மல், சிக்​கலான பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண்​பது, கட்டமைப்பு சார்ந்த முடிவு​களை எடுப்​பது மற்​றும் புதிய தொழில்​நுட்​பங்​களைக் கற்​றுக்​கொள்​வது ஆகிய​வற்​றில் அதிக கவனம் செலுத்த வேண்​டும்.

மாறிவரும் தொழில்​நுட்ப உலகுக்கு ஏற்​பத் தங்​களை மேம்படுத்திக் கொள்​ளாதவர்​கள் துறை​யில் தொடர்​வது அவர்களுக்கு பெரும் சவாலாகவே அமை​யும். தொழில்நுட்பத்துக்கு ஏற்​பத் தங்​களைத் தகவ​மைத்​துக் கொள்​பவர்​களுக்கே எதிர்​காலத்​தில் வாய்ப்​பு​கள் பிர​காச​மாக இருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT