வணிகம்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 6 குழு அமைப்பு: இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாட்​டின் இறக்​குமதி அளவை குறைத்​து, உள்​நாட்டு உற்​பத்​தியை மேம்​படுத்​து​வதற்கு சுமார் 100 தயாரிப்​பு​களைக் கண்​டறிய, துறை சார்ந்த 6 குழுக்​களை மத்​திய அசு அமைத்துள்ளது.

இது குறித்து மத்​திய அரசு அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: உள்நாட்டு உற்​பத்தியை ஊக்​குவிக்க இந்த 6 செயல்​பாட்டு குழுக்கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இவை உள்​நாட்​டில் தயாரிக்க வேண்​டிய பொருட்​களின் பட்​டியல் குறித்து விவா​திக்​கும். இந்த பட்​டியல் 3 வாரங்​களுக்​குள் மத்​திய அமைச்​சரவை செயலகத்திடம் வழங்​கப்​படும்.

மருந்​துகள், பயோ டெக் மற்​றும் மருத்​துவ உபகரணங்​கள், ரசாயனங்​கள் மற்​றும் பெட்ரோ கெமிக்​கல்​கள், ஜவுளி மற்​றும் காலணி​கள், மூலதனப் பொருட்​கள், வாக​னங்​கள் மற்​றும் மின்சார வாக​னங்​கள், மேம்​பட்ட மூலதனப் பொருட்​கள், கட்டுமான உபகரணங்​கள் மற்​றும் உள் ​கட்​டமைப்​பு, பாது​காப்பு மற்​றும் விண்​வெளி மற்​றும் மின்​னணு​வியல் ஆகிய​வற்​றில் தயாரிக்க வேண்​டிய பொருட்​கள் குறித்து இந்த குழுக்​கள் ஆராயும்.

இந்​தக் குழுக்​களின் உறுப்​பினர்​கள் வர்த்​தகம், நிதி ஆயோக், மருந்​துகள், பொருளா​தார விவ​காரங்​கள், அறி​வியல் மற்​றும் தொழில் ​நுட்​பம், ரசாயனங்​கள், ஜவுளி, கனரக தொழில், துறை​முகங்​கள் மற்​றும் கப்​பல் போக்​கு​வரத்​து, மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில் ​நுட்​பம், சாலைப் போக்​கு​ வரத்​து, புதிய மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மற்​றும் எண்​ணெய் உள்​ளிட்ட பல்​வேறு அமைச்​சகங்​கள் மற்​றும் துறை​களைச் சேர்ந்​தவர்​களாக இருப்​பர்.

இந்​தக் குழுக்​களுக்கு தொழில் மற்​றும் உள்​நாட்டு வர்த்தக மேம்பாட்​டுத் துறை​யின் செய​லா​ளர் தலைமை தாங்​கு​வார். இந்தியா​வில் உற்​பத்தி செய்​யப்​ப​டாத அல்​லது நாட்​டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போது​மான அளவில் உற்​பத்தி செய்யப்​ப​டாத தயாரிப்​பு​களை இந்​தக் குழுக்​கள் கண்​டறி​யும். உள்​நாட்டு மற்​றும் உலகளா​விய சந்​தைகள் இரண்​டுக்கு​மான உற்பத்​தியை விரி​வாக்​கு​வதே இதன் முக்​கிய நோக்​க​மாகும்.

SCROLL FOR NEXT