மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தது உலகளாவிய முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் கச்சா எண்ணெய் விலை 6.12% சரிந்து பேரல் ஒன்றுக்கு 98.09 டாலராகக் குறைந்தது.
இதுபோல இந்திய ப ங்குச் சந்தைகளும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகம் சூடுபிடித்து சென்செக்ஸ் 1,205 புள்ளிகள் (1.63%) உயர்ந்து 75,273.45 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 394 புள்ளிகள் (1.72%) அதிகரித்து 23,306.45 புள்ளிகளுடன் நிலைபெற்றது. வங்கி, நிதி நிறுவனங்கள், வாகனத் துறை பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.