வணிகம்

இந்திய பங்குச் சந்தைகள் 8-வது வாரமாக சரிவு: சென்செக்ஸ் 571 புள்ளிகள் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று காலை​யில் கடும் சரிவுடன் தொடங்​கின. ஒரு கட்​டத்​தில் சென்​செக்ஸ் 1,100 புள்​ளி​களுக்கு மேல் சரிந்​தது. பின்​னர் இந்​திய பங்​குச் சந்​தைகள் சரி​விலிருந்து மீண்​டன.

நேற்று வர்த்தக முடி​வில் தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 198 புள்​ளி​கள் (0.88%) சரிந்து 22,422-ல் நிலை பெற்​றது. இது​போல மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 571 புள்​ளி​கள் சரிந்து (0.79%) 71,910-ல் நிலை பெற்​றது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்​டாளர்​களுக்கு சுமார் ரூ.5 லட்​சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்​பட்​டது.

வங்​கி​கள், வாக​னம், எப்​எம்​சிஜி, ஸ்மால்​கேப், மிட்​கேப் உள்​ளிட்ட அனைத்து துறை சார்ந்த நிப்டி குறி​யீடு​களும் சரிவை சந்​தித்​தன. எனினும், ஐ.டி. துறை குறி​யீடு மட்​டும் 2.17% உயர்ந்​தது.

செப்​டம்​பர் மாத வாகன விற்​பனை கணிச​மாக குறைந்​த​தால் இத்​துறை சார்ந்த பங்​கு​கள் அதிக வீழ்ச்​சியை சந்​தித்​தன. பஜாஜ் ஆட்டோ பங்கு அதி​கபட்​ச​மாக 7.6% சரிந்​தது.

கச்சா எண்​ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியதே பங்​குச் சந்​தை சரிவுக்கு காரணமாக அமைந்தது. காந்தி ஜெயந்​தியை முன்​னிட்டு இன்று பங்​குச் சந்​தைகளுக்கு விடு​முறை ஆகும். எனவே, இந்த வார​மும் பங்​குச் சந்​தைகள் சரிவுடன் முடிந்​தன.இதன் மூலம், 25 ஆண்​டுக்​குப் பிறகு இந்​திய பங்​குச் சந்​தைகள் தொடர்ந்து 8-வது வார​மாக சரி​வில்​ முடிந்​துள்​ளது.

SCROLL FOR NEXT