வணிகம்

ட்​ரோன்கள் உற்​பத்​தி​யில் சுயசார்பு மிகவும் அவசியம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ட்ரோன் உற்​பத்​தி​யில் சுய​சார்பு மிக அவசியம் என்று மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்நாத் சிங் தெரி​வித்​தார். டெல்​லி​யில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய பாது​காப்பு தொழிற்சாலைகளுக்கான மாநாடு நேற்று தொடங்​கியது.

இதில் பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: ரஷ்யா - உக்​ரைன் நாடு​களும், இஸ்​ரேல் - ஈரான் நாடுகளும் இன்று போரில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இதனை ஒட்​டுமொத்த உலக​மும் பார்த்து கொண்​டிருக்​கிறது.

          

வருங்​காலத்​தில் போர் தளவாடங்​களில் ட்ரோன்​கள் மற்றும் ட்ரோன்​கள் ஒழிப்பு ஆயுதங்​கள் ஆகியவற்றுக்கான தொழில்​நுட்​பங்​கள் மிக முக்​கிய பங்கு வகிக்​கும் என்​பது தெளி​வாகத் தெரி​கிறது.

இதன் தொடர்ச்​சி​யாக ட்ரோன் உற்​பத்​திக்​கான சுற்​றுச்​சூழலியலை நிறுவ வேண்​டியது, மிக அவசரத் தேவை​யாக அமைந்​துள்​ளது. ட்ரோன் உற்​பத்​தியை அதிக அளவில் நாம் செய்ய வேண்​டும். ட்ரோன் உற்​பத்​தி​யில் நாம் சுய​சார்​புடன் இருக்க வேண்​டும். இது உற்​பத்தி என்ற அளவில் மட்​டுமல்​லாமல் உபகரணங்​கள் அளவிலும் இருக்க வேண்டியது அவசி​ய​மாகும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT