வணிகம்

இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் உச்சம் தொட்ட ரஷ்யாவின் பங்கு

வேட்டையன்

மும்பை: இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய நாட்டின் பங்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாத தரவுகளின் படி இந்தியாவில் இறக்குமதியான கச்சா எண்ணெயில் சுமார் 48 சதவீதம் ரஷ்யாவின் பங்கு உள்ளதாக தகவல்.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்​கும் மசோதா அமெரிக்க செனட் சபை​யில் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​யும் நாடு​களுக்கு 100 சதவீத வரி விதிக்க அதி​காரம் அளிக்​கும் புதிய தடைகள் மசோ​தாவுக்கு அமெரிக்க செனட் சபை கடந்த வாரம் ஒப்​புதல் அளித்​தது.

ரஷ்​யா​வின் ஆற்​றல் வளங்​களை அதி​கம் வாங்​கும் முதல் 5 நாடுகளை இலக்​காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்​ளது. இதில் இந்​தி​யா, சீனா, அஜர்​பைஜான், ஹங்​கேரி, ஸ்லோ​வாக்​கியா ஆகிய நாடு​கள் இடம்​பெற்​றுள்​ளன. உக்​ரைன் மீதான போரை நிறுத்​து​வதற்​கும், ரஷ்​யா​வுக்​கான நிதி ஆதா​ரங்​களை முடக்​கு​வதற்​கும், இந்த நாடு​களின் ஏற்​றுமதி பொருட்​கள் மீது 100% வரை வரி​களை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​புக்கு இம்​மசோதா முழு அதி​காரம் அளிக்​கிறது.

அந்த வகையில் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட பொருட்​கள் அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும்​போது அந்​தப் பொருட்​களுக்கு 100 சதவீத வரி​வி​திக்​க​வும் இந்த மசோதா வழி​வகை செய்​கிறது. இந்நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 18.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவில் இருந்து மற்றும் 8.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 48 சதவீதமாக உள்ளது.

மேற்காசிய போர் காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்ததாக தகவல்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளதாக தகவல். ஒரு பக்கம் அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை, மறுபக்கம் மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் நிலவும் சவால் உள்ளிட்டவற்றை இந்தியா எப்படி சமாளிக்க உள்ளது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

SCROLL FOR NEXT