வணிகம்

அக்​டோபரில் சில்லறை பணவீக்கம் 6.09% ஆக உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று வெளி​யிட்ட தரவு​களின்​படி, நாட்​டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்​டோபர் மாதத்​தில் 6.09 சதவீதமாக அதி​கரித்​துள்​ளது.

இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்​டுகளில் முதல்​முறை​யாக ரிசர்வ் வங்​கி​யின் உச்​சபட்ச வரம்​பான 6 சதவீதத்​தைத் தாண்​டியுள்​ளது. காய்​கறிகள் மற்​றும் அத்​தி​யாவ​சி​யப் பொருட்​களின் விலை உயர்​வால், செப்​டம்​பரில் 7.74 சதவீத​மாக இருந்த உணவுப் பணவீக்​கம் அக்​டோபரில் 8.94 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. சில்லறைப் பணவீக்​கம் கடந்த செப்​டம்​பரில் 5.54 சதவீத​மாக இருந்​தது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT